|
|
|
ஸ்ரீ: |
|
 |
|
அநுஷ்டானம்
காலை தர்மம்
|
- ஸூர்ய உதயத்திற்கு முன்பே துயிலெழவேண்டும்.
- ஹரி: என்ற நாமத்தை ஏழுதரம் கூறவேண்டும்.
- கஜேந்த்ர மோக்ஷ படத்தை பார்த்தல் அல்லது அந்தக் கதையை நினைத்து கஜேந்த்ர வரதனை த்யானித்தல்.
- கீழ் ச்லோகத்தைச் சொல்லவேண்டும்.
ப்ராத: ஸ்மராமி பவபீதி மஹார்த்தி சாந்த்யை
நாராயணம் கருட வாஹந மஞ்ஜநாபம்!
க்ராஹாபிபூத மதவாரண முக்தி ஹேதும்
சக்ராயுதம் தருண வாரிஜபத்ரநேத்ரம் !!
|
|
'ஓம் நம: க்ஷிதிதராய' என்று சொல்லி காலைத் தரையில்
வைத்து படுக்கையை விட்டு எழுந்திருக்கவேண்டும். பூமாதேவியை காலினால் தொடுவதற்காக பொருத்தருள
ப்ரார்த்திக்கவேண்டும். |
|
பூணலைக் காதில் சுற்றிக்கொண்டு, மூன்றுதடவை கைகளைத் தட்டி
ஒலி எழுப்பி அவ்விடத்திலுள்ள பூதங்களை அப்புறம் செல்லுமாறு ப்ரார்த்தித்துக் கொண்டு
மெளனமாக மலஜலம் விஸர்ஜனம் செய்ய வேண்டும். புண்ய தீர்த்தமல்லாத தீர்த்தத்தைக் கொண்டு
ப்ரக்ஷாளனம் (அலும்புதல்) பண்ணிக்கொள்ளவேண்டும். |
|
|
Why & How to pay?
|