டொனேஷன் ஏன் வழங்கவேண்டும்?
டொனேஷன் ஏன் வழங்கவேண்டும்?
வருமானத்திற்கு எதுவும் வாய்ப்பில்லாத, மிக மிக அரிதான வைதீக, சாஸ்த்ர, ஸம்ப்ரதாய விஷயங்களை
உள்ளடக்கிய இந்த இணைய தளத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஒருவனாக நடத்தி வருகிறேன்.
தற்போது சற்று குறைந்திருந்தாலும், இணைய தள பதிவுக் கட்டணம், புதுப்பிக்கும் கட்டணம், தொய்வில்லாத
ஸேவை வழங்கக்கூடிய சர்வரில் (டிஸ்கவுண்ட் ஏ.எஸ்.பி.நெட்) ஒலி, படங்கள், வீடியோ காட்சிகள் உட்பட
அனைத்து வகையிலும் விளக்கங்கள் அளிக்கக்கூடிய தகவல்களை சேமித்து வைக்க தேவையான இடத்திற்கான
கட்டணம், எத்தனைபேர் டவுன்லோட் செய்தாலும் தாங்கக்கூடிய பேண்ட்விட்த்கான கட்டணம் மற்றும் சர்வரில்
தகவல்களை ஏற்றி இறக்க மாதாந்திர (ப்ராட்பேண்ட்) டெலிபோன் இணைப்புக் கட்டணம் என வருடத்திற்கு
சுமார் 72,000.00 ரூபாய் தனி ஒருவனாகவே செலவு செய்து இந்த வெப்சைட்டை நடத்திக்கொண்டு வருகிறேன்.
ஒரு நாகை்குச் சுமார் (சராசரியாக) ஆறு மணி நேரங்களுக்கும் குறையாமல் உழைத்து இந்த தகவல்களை
காலத்திற்கேற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாளுக்கு நாள் மேம்படுத்தி வந்துகொண்டிருக்கிறேன்.
புதிது புதிதாக வரும் தொழில் நுட்பங்களை விலை மதிப்புள்ள நூல்களை வாங்கிப் படித்தும், பயிற்சி எடுத்துக்
கொண்டும், அதற்கான சாப்ட்வேர்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கும், அவ்வப்போது ஏற்படும் ப்ரச்சினைகளைத்
தீர்த்துக்கொள்வதற்கும் மிகவும் போராடியிருக்கிறேன்.
2000 மாவது ஆண்டு முதல் யாகூவில் வைதீகம் என்ற ஒரு மின் குழுவை நடத்தி வருகிறேன். சுமார் ஆயிரம்
உறுப்பினர்களைக் கொண்ட அந்த மின்குழுவின் உறுப்பினர்கள் தினமும் வைதீக சம்பந்தமாகக் கேட்கும் எந்தக்
கேள்விக்கும் சலிப்பின்றி இன்றுவரை உடனுக்குடன் பதில் அளித்து வருகிறேன். இதுவரை சுமார் நான்காயிரம்
கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் உபாகர்மாவின்போது (ஆவணியவிட்டத்தின்போது) மட்டும் சுமார் 60 ஆயிரம்பேர்
உலகெங்கும் இருந்து இந்த இணைய தளத்தில் அவ்வப்போது வெளெியிடப்படும் யஜூர் மற்றும் ஸாமவேத
தகவல்களைக் கொண்டு உபாகர்மா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 5 வருடங்களாக "பரந்தாமன்" என்ற பெயரில் வருடந்தோறும் சுமார் 25 ஆயிரம் பஞ்சாங்கங்கள் தயாரித்து
இலவசமாக விநியோகம் செய்து வருகிறேன். இதிலும் அடியேனுடைய கைப்பணம் அதிகமாக செலவாகிறது. மற்றும்
அவ்வப்போது ஈமெயில் வழியாக அன்பர்கள் கேட்கும் பஞ்சாங்க உதவி, நாள் பார்த்தல், ஜாதகப் பொருத்தம் பார்த்தல்,
ஜாதகம் கணித்தல் முதலிய அனைத்தையும் இன்றுவரை இலவசமாகவே செய்து வருகிறேன்.
மேலும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும் அனைத்து திருமண ஜாதக விளம்பரங்களையும், இலவசமாகவே
வெளியிட்டு ஸேவை செய்து வருகிறேன். தாங்கள் மனம் இறங்கி அடியேனுடைய கைங்கர்யத்திற்கு டொனேஷன்
வழங்க இந்தக் காரணங்கள் போதவில்லையென்றால் மேலும் அடியேன் என்ன ஸேவை செய்யவேண்டும் என>
தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
If you wish to pay $5.0 immediately using your credit card Click the PayPal button as "Pay Sambhavana" at the top right of this page!
If you wish to pay more than $5.0/- send me an email with your feedback with the contribution amount to vaideekam@gmail.com
I will send you an 'email request' through 'pay pal' for that amount.
தீவளூர் என்.வி.ஸ்ரீநிவாஸ தாஸன்